விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பற்பல வேடங்களிலும், முக்கியமாக பெண் வேடங்களில் அதிகமாக நடித்து பிரபலமானவர்தான் நாஞ்சில் விஜயன்,
விஜய் டிவியில் உள்ள அனைத்து நிகழ்ச்சியிலும் பல வேடங்களில் நடித்து தன் திரமையை பல காலமாக காட்டிக் கொண்டு வந்திருக்கிறார், இவர் பண்ணாத தனியார் சேனல்களும் இல்லை, பண்ணாத மேடை நிகழ்ச்சியும் இல்லை, ஆனாலும் அவரை நிறைய பேர் கலாய்த்து விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அவர் சமீபத்தில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பிரத்தியேக எபிசோடில் அவருக்குல் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்காட்டினார், அதைக் கண்ட ரசிகர்கள் ஆச்சர்யத்திற்கு உள்ளனர்கள்.
![](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/02/BeFunky-collage-13.jpg)
#image_title
அவருக்கு சமீபத்தில் தான் மிக பிரம்மாண்டமாக கல்யாணம் நடந்தது, அவர் கல்யாணத்துக்கு சின்னத்திறையில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் வந்து அவரை வாழ்த்தி கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
![](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/02/BeFunky-collage-14.jpg)
#image_title
நாஞ்சில் விஜயின் சில காலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அடுத்த கட்டமாக கால் எடுத்து வைத்திருக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது போல் அவரும் சில படங்களின் இருப்பது போல் போட்டோக்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது,
நாஞ்சில் விஜயன் சில நாட்களுக்கு முன்னால் ஒரு இன்டர்வியூ ஒன்றில் தான் கஷ்டப்பட்ட பக்கங்களை பற்றி மனம் உருகி பேசிய வீடியோ ஒன்று வைரலாக இருந்தது,
அதில் அவர் அப்பா பெரும் குடிகாரர் என்றும், அதனால் தான் அவர் குடும்பம் அழிந்ததாகவும், தான் சின்ன வயதில் கஷ்டப்பட்டதற்கு காரணமும் அதனால் தான் என்றும், அவர் குடித்து கொடுமைப்படுத்தியதற்காகத்தான் என் அம்மா தீக்குளித்து என் கண் முன்னே இறந்தார் என்றும், அவங்க அம்மா இறக்கும் கடைசி தருவாயில் ஒரு கிளாஸ் தண்ணி கூட கொடுக்க முடியல என்று மனம் நொந்து பேசி உள்ளார், அந்த வீடியோவை கண்ட மக்கள் அனைவரும் நாஞ்சில் விஜயனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.