இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. இந்த பாட்ட பாடுனது ரஜினிகாந்தின் மனைவி லதா தானா.. பலபேரோட பெவரைட் ஆச்சே..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவுக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கிய ரஜினிகாந்த் அவர்களின் மனைவி, லதா ரஜினிகாந்த் பற்றி தெரியாத நிறைய உண்மைகளில் ஒன்று, அவர் இதுவரையில் தமிழ் சினிமாவில் பட்டித் தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்களை பல பாடியுள்ளார் அது இதுவரையும் நிறைய மக்களுக்கு தெரியாது அவரின் மெல்லிய குழந்தை போன்ற தேன் சொட்டும் ரத்தத்தில் அவர் பாடிய அசத்திய பல பாடல்கள் உண்டு. ஆனால் அவர்தான் பாடினாரா என்று தெரியாத அளவுக்கு அவரின் குரலின் மென்மையான சுவையின் ஓட்டம் அந்தப் பாடலின் பாடியவரை இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்தது.

latha rajinikanth
latha rajini kanth

அவர் பாடிய பல பாடல்கள் மிகவும் பிரத்தேகமான தனித்துவமான பாடலில் ஒன்றான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்ற பாடலை இவர்தான் பாடியுள்ளார், அது மட்டுமல்லாமல் கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தில் உள்ள கொஞ்ச நேரம் ஆத்தங்கரையோரம் என்ற ராப் கலந்த குத்து படலும் இதில் அடங்கும், ரஜினிகாந்த் நடித்த வள்ளி படத்தில் டிங்கு டாங்கு டப்பா டக்கு டாங்கு சாங்கப்பா என்ற பாடலும், குக்குக்கு கூவும் குயில்ப்பா என்ற பாடலையும், அது மட்டுமல்லாமல் யாரும் நம்பவே முடியாது அளவிற்கு சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் “காதல் கனவா உன்னை கரம் விடமாட்டேன் இது சத்தியம் சத்தியம்” சூப்பர் ஹிட் பாடலையும் இவர்தான் பாடியுள்ளார்.

   
latha rajinikanth
latha rajini kanth 1

இதுபோன்று இவர் பாடி அசத்திய பாடல்கள் பல உண்டு, சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் ஒருவரிடம் நீங்கள் இதுவரை கண்டிராத ரேர் வாய்ஸ் சில பாடல் மட்டும் பாடி உங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கிற பாடகி யார் என்று கேட்ட கேள்விக்கு அங்கு வந்துள்ள ஒரு நபர் லதா ரஜினிகாந்த் தனித்துவமான வாய்ஸில் பாடிய அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் உள்ள கடவுள் உள்ளம் கருணை இல்லம் என்ற பாடலை சொல்லியிருந்தார். அந்த அரங்கமே இந்த பாடலை லதா ரஜினிகாந்தா பாடினார்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

author avatar
Ranjith Kumar