தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் தன்னோட சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து TVK சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார். காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் விஜய் கட்சியில் செங்கோட்டையன், அடுத்ததாக நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக உள்ளது. தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மடிக்கணினி வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…
தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…
தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…
கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…
பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…