Connect with us

எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமே அத பண்ண மாட்டேன்.. நமிதா எடுத்த முடிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

CINEMA

எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமே அத பண்ண மாட்டேன்.. நமிதா எடுத்த முடிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

எத்தனை கோடி கொடுத்தாலும் இனி கவர்ச்சி கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகை நமீதா தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக வழங்க வந்தவர் நடிகை நமிதா. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சொந்தம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது .

   

அதன் பிறகு விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து பிரபலங்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். அதிலும் இவர் ரசிகர்களை செல்லமாக ஹாய் மச்சான் என்று அழைப்பது பலருக்கும் பிடிக்கும் . கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்த இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

 

இவர் தமிழில் எங்கள் அண்ணன், மகா நடிகன், இங்கிலீஷ்காரன், சாணக்யா, பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இப்போது நடிகைகள் காட்டும் கவர்ச்சியில்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் சுத்தம் சுகாதாரம் என்று பேசிக் கொண்டிருந்த இவர் சில நாட்களிலேயே வெளியே வந்தார். பிறகு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம், குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த அவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

தான் சினிமாவில் கவர்ச்சியாக நடித்தது குறித்தும் மனம் திறந்து கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை நமீதா ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கின்றார். அதாவது இனி சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். எத்தனை கோடி கொடுத்தாலும் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top