நடிகை சனம் செட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் இது யாருக்காக என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பிரபல மாடல் அழகியாகவும் நடிகையாகவும் வருபவர் சனம் செட்டி. பல விளம்பர படங்களின் நடித்த பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரால் முன்னணி நடிகை என்ற பட்டியலில் வர முடியவில்லை. தற்போது வரை நல்ல பட வாய்ப்புக்காக காத்திருக்கின்றார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் எல்லா விஷயங்களையும் மூக்கை நுழைத்து வந்தார். இதனால் பல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இருப்பினும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்றிருந்தார். இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனை காதலித்து வந்ததாகவும், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டார்.
பிக் பாஸ் 2 சீசனில் நடிகர் தர்ஷன் ஷெரினுடன் நெருங்கி பழகி வந்தார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்த நிலையில் வீட்டிற்கு வெளியே சரணம் இல்லை. நான்தான் அவருடைய காதலி என்று கூறி இது போன்ற புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த தர்ஷன் நடிகை சனம் செட்டியை தவிர்க்க தொடங்கினார்.
அவருடன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி அவரை பிரேக்கப் செய்துவிட்டார், இதனை ஏற்றுக் கொள்ளாத சனம் செட்டி காவல் நிலையத்தில் புகார் அளிப்பது அவரைப் பற்றி தவறாக பேசுவது என்று தொடர்ந்து பல விஷயங்களை செய்து வந்தார். இருப்பினும் காலப்போக்கில் அதனை மறந்து விட்டு தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய சனம் செட்டி அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இவர் வேறு ஒருவரை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூட சனம் செட்டி வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது போடா டேய் போடா டேய் என்ற பாடலுக்கு ரீல் செய்திருக்கின்றார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது என்ன உங்கள் முன்னாள் காதலர் தர்ஷனுக்கா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram