மாறுவேடத்தில் தியேட்டருக்கு சென்ற நம்பியார்… பதறிய அவரது மனைவி…

By Meena on அக்டோபர் 2, 2024

Spread the love

நம்பியார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய வில்லன் நடிகர் குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூரில் பிறந்தவர் நம்பியார். இவரது முழு பெயர் மஞ்சேரி நாராயண நம்பியார் என்பதாகும். தனது 13 வயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த நம்பியார் மதுரை பாலநாத வினோத கா சபையில் சேர்ந்தார்.

   

1935 ஆம் ஆண்டு ஹிந்தி மற்றும் தமிழில் எடுக்கப்பட்ட பக்த ராமதாஸ் திரைப்படத்தில் டி.கே சம்பங்கி உடன் நகைச்சுவை நடிகராக நடித்து அறிமுகமானார் நம்பியார். அதற்கு பிறகு ஹீரோவாக நடித்து முதலில் வாழ்க்கை தொடங்கினாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு வில்லனாக நடிக்க ஆரம்பித்து மக்கள் அதை வரவேற்றதால் வில்லனாகவே நடிக்க ஆரம்பித்தார் நம்பியார்.

   

எம்ஜிஆரின் படங்கள் பெரும்பாலிலும் கொடூரமான வில்லன் கதாபாத்திராத்தில் நடித்திருப்பார் நம்பியார். மேலும் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகியோர் திரைப்படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு இணையாக அந்த காலத்தில் போற்றப்பட்டவர் நம்பியார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சேர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நம்பியார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு அன்பான மனிதர் ஆவார். சபரிமலை ஐயப்பனுக்கு 50 வருடங்களுக்கும் மேலாக மாலை போட்டு பல கன்னி சாமிகளை கூட்டி சென்றவர். ஒரு படத்தில் எம்ஜிஆர் நடிக்கும் போது இவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது.

அது என்னவென்றால் எம்ஜிஆர் நடித்து ஹிட்டான திரைப்படம் எங்கள் வீட்டுப் பிள்ளை. அந்த திரைப்படத்தில் நம்பியார் வில்லனாக நடித்திருப்பார். மக்களோடு படம் பார்க்கலாம் என்று மாறுவேடத்தில் தியேட்டருக்கு தனது மனைவியுடன் சென்றிருக்கிறார் நம்பியார். அப்போது எம்.ஜி.ஆர் நம்பியாரை படத்தில் அடிக்கும்போது ரசிகர்கள் ஆக்ரோஷப்பட்டு தியேட்டரையே தொம்சம் செய்து இருக்கின்றனர். அப்போது அதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் நம்பியார். ஆனால் நம்பியாரின் மனைவியோ நீங்க மாறு வேஷத்துல வந்து இருக்கீங்க படத்துல இப்படி பார்த்ததுக்கே எம்ஜிஆர் ரசிகர்கள் இப்படி பண்றாங்க நீங்க தான் இங்க மாறுவேடத்தில் இருக்கீங்கனு தெரிஞ்சா உங்கள பிச்சி எறிஞ்சிடுவாங்க வாங்க நம்ம போயிடலாம் என்று பதட்டப்பட்டு நம்பியாரின் மனைவி நம்பியாரை வீட்டிற்கு கூட்டி சென்றிருக்கிறார்.