பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் கடந்த 2019 ரிலீசான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓ மண பெண்ணே, எல்ஜிஎம், பார்க்கிங் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் பார்க்கிங் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்த நிலையில் லப்பர் பந்து படம் வெற்றி அடைந்ததால் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக நடிக்க உள்ளார். அந்த படத்தின் இயக்குனர் விக்னராஜன் இயக்க உள்ளார். விக்னராஜன் அந்தகாரம் என்ற திரைப்படத்தை இயக்கி மக்களிடையே பிரபலமானவர். இந்த படத்தின் மூலம் பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார்.