ஊரே அவங்க பேர வச்சு சாப்பிடுற டிஷ்… ஆனா குஷ்பூவுக்கு… சுந்தர்C ஓபன் டாக்…

By Meena on அக்டோபர் 2, 2024

Spread the love

சுந்தர் C தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். இவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் விநாயகர் சுந்தர் வேல் என்பதாகும். ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் சுந்தர் C.

   

1995 ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சுந்தர் C. இவர் இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் மூன்று மாநில திரைப்பட விருதுகளை வென்றது.

   

2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுந்தர்சி அடுத்ததாக வீராப்பு, ஆயுதம் செய்வோம், ஐந்தாம் படை, குரு சிஷ்யன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சுந்தர் சி. அதற்கடுத்ததாக இவர் அரண்மனை என்ற திரைப்படத்தை இயக்கி நடிக்க ஆரம்பித்தார். இதில் மூன்று பாகங்கள் வெளிவந்தது.

 

தற்போது அரண்மனை நான்காம் பாகமும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இது இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக புகழின் உச்சியில் இருந்த நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுந்தர் சி சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரைப் பற்றி பேசி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் குஷ்பூ சுத்தமா தமிழ்நாட்டு பொண்ணாவே மாறிட்டாங்க. தமிழ்நாட்டில் குஷ்பூ பேர்ல இட்லியே வந்துருச்சு. ஆனா அவங்களுக்கு இட்லி தோசை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா எனக்கு இட்லி தோசை தான் ரொம்ப பிடிக்கும். குஷ்புக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் என்னன்னா ரசம் சாதம் தான் என்று குஷ்புவின் உணவு பழக்க வழக்கங்களை பற்றி ஓபனாக பேசியிருக்கிறார் சுந்தர் சி.