பிரபல நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். இளம் காதலர்களைப் போல வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்ததால் திரையுலகினர் அதிர்ச்சியில் இருந்தனர். சமீபத்தில் ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவியை பிரிய மனமில்லை எனவும், விவாகரத்து பற்றி பேச தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே ஜெயம் ரவி ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடமைகளை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆர்த்தியும் ஜெயம் ரவியும் இணைந்து வாழ வேண்டும் என பலரும் சோசியல் மீடியாவில் கோரிக்கை விடுத்தனர். பிரபல பாடகியுடன் இணைத்தும் ஜெயம் ரவியை பற்றி சிலர் தவறாக பேசினார்கள்.
அந்த பாடகி பற்றி தவறாக பேசாதீர்கள் என ஜெயம் ரவியும் கோரிக்கை விடுத்தார்m தனிப்பட்ட வாழ்க்கை ஒரு புறம் இருந்தாலும் சினிமாவில் ஜெயம் ரவி பிஸியாக நடித்தது வருகிறார். தற்போது ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் ஜெயம் ரவி மும்பையில் செட்டிலாக போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. படப்பிடிப்பு சமயத்தில் மட்டும் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து செல்லலாம் என ஜெயம் ரவி நினைக்கிறார். பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பட குழுவினர் மும்பைக்கு சென்றோ அல்லது ஜெயம் ரவி மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தோம் டப்பிங் பேசி முடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் மும்பையில் படங்கள் குறித்து பேச ஒரு அலுவலகத்தையும் ஜெயம் ரவி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.