சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் நல்ல கண்ணுவின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் செய்தி அறிந்ததும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
