“இனி கோகோ கோலா கிடையாது” அடிமடியில் கைவைத்த இந்தியா… அதிர்ச்சியில் அமெரிக்கா..!!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25 சதவீதம் வரியை உயர்த்தி உள்ளார். அதாவது முன்பு 25% ஆக இருந்த நிலையில் இப்பொழுது 50% உயர்ந்துள்ளது. இந்த மாற்றத்தினால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியா லிவ்லி ப்ரொஃபஷனல் பல்கலைக்கழகம் (LPU) நாடு தழுவிய ‘சுதேசி 2.0’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. டாக்டர் அசோக் குமார் மித்தல் நேற்று முன்தினம் கோகோ கோலா குளிர்பானங்களை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். எம்.பி.மித்தல் அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்பு அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு இந்தியா அடிப்படையாது என்றும் கூறியுள்ளார். அமெரிக்கா வரிகளை குறைக்காமல் இருந்தால் LPU அமைதியாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார். அமெரிக்கா இந்தியாவின் மதிப்பை குறைவாக மதிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் விரைவில் வரும். அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய்  இறக்குமதி செய்கின்றனர். அதனால் அந்த நாடுகள் இந்தியாவை நியாயமற்றமுறையில் குறிவைத்துள்ளனர். அவற்றின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இது போன்ற முயற்சியை செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.