பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வரை எந்த அறிவிப்பு அது தொடர்பாக வெளியாகவில்லை. தற்போது அண்ணாமலையின் நாற்காலியில் நயினார் நாகேந்திரன் அமர்ந்து கொண்டிருக்கிறார். இது நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிகிறது. இது ரீதியாக தங்களது அதிருப்திகளை பொது நிகழ்ச்சி ஒன்றில் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பார். அதாவது எனக்கு நிர்வாகிகள் குறைந்தபட்சம் மரியாதை கூட தருவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாகேந்திரனின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு நாராயணன் திருப்பதி மறுப்பு தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில் திமுக இது போன்ற வதந்தியை பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தலைவர் பதவியில் மாற்றமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
