வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு (லீக்கேஜ்) ஏற்பட்டால், பாதுகாப்பாகச் செயல்பட வேண்டிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. சமையல் கேஸில் அதன் வாசனையை அறிய எத்தில் மெர்காப்டன் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுவதால், பூண்டு அல்லது அழுகிய முட்டை போன்ற வாசனை வந்தால் உடனே வாயுக் கசிவு இருப்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
கசிவு இருப்பது தெரிந்தவுடன், வீட்டில் ஆன் (On) செய்யப்பட்டிருக்கும் அனைத்து மின்சார ஸ்விட்ச்சுகளையும் உடனடியாக அணைத்துவிட வேண்டும், ஆனால் அணைந்திருக்கும் ஸ்விட்ச்சுகளைத் தொடக் கூடாது. ஜன்னல்கள் மற்றும் கதவுகளை முழுவதுமாகத் திறந்து வைத்து காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும். நீங்கள் பதட்டம் அடையாமல் நிதானமாகச் செயல்பட வேண்டும். கசிவு தொடர்ந்தால், ரெகுலேட்டரைக் கழட்டிவிட்டு, சிலிண்டரை அதன் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
அருகில் எரியும் மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்ற தீ மூலங்களை அணைக்கவும், தீப்பெட்டி அல்லது லைட்டர்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை சிலிண்டர் சூடாகி தீப்பிடிக்கத் தொடங்கிவிட்டால், பயந்து ஓடாமல், ஒரு பெரிய சணல் சாக்குப்பை அல்லது போர்வையைத் தண்ணீரில் நனைத்து, சிலிண்டரின் மேல் சுற்றினால் தீயை அணைக்க முடியும். வெளியூருக்குப் போகும்போது ரெகுலேட்டரைக் கழட்டி, மூடி போட்ட பின்னரே சிலிண்டரைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
