திடீர் திருப்பம்… திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நயினார்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முதமாக நடந்து கொண்டிருக்க மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைப்பதாக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தமிழக வெற்றிக்கழகம் 2026 தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே தான் போட்டி எனக் கூறுவது விந்தையிலும் விந்தை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை யார் வேண்டுமானாலும் கூட்டி விடலாம். ஆட்சிக்கு வரவேண்டும் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திடீரென நைனார் நாகேந்திரன் விஜயை விமர்சித்து திமுகவுக்கு சாதகமாக பேசி உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.