முக்கிய திருவிழாக்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பெரிய கந்தூரி திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இங்கு மொத்தம் 14 நாட்கள் ஜாம்புவானோடை தர்கா பெரிய கந்தூரி விழா நடைபெறவிருக்கிறது. இந்த கந்தூரி திருவிழா வருடம் தோறும் இந்த பகுதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
