#image_title
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள். ஆனால் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் நாகேஷ். இருவரும் வாய்ப்புத் தேடிய காலத்தில் ஒரே அறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
அப்போது நாகேஷ் வாலியிடம் இருக்கும் கெட்டப் பழக்கம் ஒன்றை சுட்டிக்காட்டி திட்டியுள்ளார். வாலி, பகல் வேலையிலும் அதிகமாக தூங்கும் பழக்கம் உள்ளவராம். அதனால் நாகேஷ் “என்னடா எப்பப் பாத்தாலும் இப்படி தூங்கிட்டே இருக்க. இப்படி இருந்தா எப்படி பாடல் ஆசிரியனாக ஆகமுடியும். நான் பேப்பரும் பேனாவும் தர்றேன். எதாவது கவிதை எழுது. அது பின்னாடி உதவும்” எனத் திட்டுவாராம். அப்படி தூங்குமூஞ்சியாக இருந்த வாலி, பாடல் ஆசிரியரான பின்னர் தூங்குவதற்கு நேரம் இல்லாமல் பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…
பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…