Categories: சினிமா

Low Budjet இல் உருவாகி பட்டையை கிளப்பிய 6 தமிழ் திரைப்படங்கள்… சொற்ப முதலீட்டில் அதிக லாபம் பார்த்த கைதி திரைப்படம்…

Spread the love

தமிழ் சினிமாவில் எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். பிரம்மாண்டமாக செலவு செய்து எடுப்பதிலிருந்து மிகக் குறைந்த பட்ஜெட் வரை படங்கள் எடுப்பவர்களும் இருக்கின்றனர். பெரிய நடிகர்கள் படங்கள் வெற்றி பெறுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் குறைந்த பட்சத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் மெகா ஹிட் ஆகி உள்ளது. அப்படி குறைந்த பட்ஜெட்டில் எடுத்து வெற்றி பெற்ற ஆறு தமிழ் படங்கள் என்னவென்று என்பதை இனி காண்போம்.

1. கைதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்த திரைப்படம் கைதி. இந்த படம் வித்தியாசமான கதை களத்தை கொண்டிருந்ததால் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. ரூபாய் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் ஒட்டுமொத்தமாக 106 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

2. LKG
பிரபு இயக்கி ஆர் ஜே பாலாஜி மற்றும் பிரியா ஆனந்த் நடித்த திரைப்படம் எல் கே ஜி. இந்த திரைப்படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது. ரூபாய் மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான எல் கே ஜி திரைப்படம் ரூபாய் 15 கோடி வசூல் செய்தது.

3. காக்கா முட்டை
மணிகண்டன் இயக்கி ஐஸ்வர்யா ராஜேஷ், விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு பல திரைப்பட விருதுகளையும் வாங்கியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கேரியரில் முக்கியமான இடத்தை பிடித்தது காக்கா முட்டை. ரூபாய் ஒரு கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூபாய் 10 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

4. 96
சி பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி ஆகியோர் நடித்த திரைப்படம் 96. கிளாசிக் கல்ட் திரைப்படங்களில் ஒன்றாக இது இடம் பிடித்தது. இந்த படம் பெரும்பாலானோருக்கு பள்ளி நினைவுகளை திரும்ப கொண்டு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற இந்த 96 திரைப்படம் ரூபாய் 18 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக ரூபாய் 55 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

5. கோலமாவு கோகிலா
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கிய முதல் திரைப்படம் இது. நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். கிரைம் தில்லர் படமாக உருவான இது நல்ல விமர்சனங்களை நெல்சனுக்கு பெற்று தந்தது. ரூபாய் மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 43 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

6. ராட்சசன்
ராம்குமார் இயக்கத்தில் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவான திரைப்படம் தான் ராட்சசன். விஷ்ணு விஷால், அமலாபால் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப்படம் ரசிகர்களுக்கு நல்ல ஒரு திரில்லர் சஸ்பென்ஸ் ஆக அமைந்தது. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பையும் சஸ்பென்சிலையும் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 20 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

admin

Recent Posts

குஷியோ குஷி..! தாய்மாமன் தங்கமோதிர திட்டம் தொடக்கம்.. தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தாய்மாமன் தங்க மோதிரம்…

2 minutes ago

தவெக-வில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’ வைத்த விஜய்..? இடைத்தேர்தலில் சீட் கிடையாது என அதிரடி முடிவு..!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…

5 minutes ago

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

32 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

43 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

52 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

1 மணத்தியாலம் ago