Connect with us

CINEMA

நா கொஞ்சம் Gap விட்டதால, ஆர்யா அந்த இடத்தை புடிச்சிட்டாரு.. பெருசா சம்பாதிக்காம வீட்ல மரியாதையே… பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத் உருக்கம்..

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன்கள் ராஜூ சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத். இதில் ராஜூ சுந்தரம் டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். ஜீன்ஸ், எங்கேயும் காதல், ஒன் டூ த்ரி, உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் அவரது மூன்றாவது தம்பி நாகேந்திர பிரசாத் ஒன் டூ த்ரீ, போகன், குஷி, சாக்லேட், கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர்கள் இருவரையும் விட நடிப்பில், இயக்கத்தில் டாப் லெவலுக்கு சென்றவர் பிரபுதேவா. தமிழில் போக்கிரி, வில்லு, இந்தியில் அக்‌ஷய்குமார் நடித்த படம் என, வேற லெவலில் இருக்கிறார். தொடர்ந்தும் தமிழ் படங்களில் நடிக்கிறார். இப்போது, விஜய் நடிப்பில் உருவாகி வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், நடன இயக்குநராகவும் பணிசெய்து, நடித்தும் வருகிறார் பிரபுதேவா.

   

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ராஜூ சுந்தரம், பிரபுதேவா ஆகியோரின் தம்பியான நாகேந்திர பிரசாத் கூறியதாவது, குஷி படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தேன். பிறகு சாக்லேட் படத்திலும் அதுபோன்ற கேரக்டரே வந்தது. இன்றுவரை ஹீரோ வாய்ப்பு என்பது எனக்கு வரவே இல்லை. சில படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களிலும், இரண்டு, மூன்று ஹீரோக்களில் ஒருவனாகவும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நான் குஷி படத்தில் நடித்த பிறகு 5 ஆண்டுகள் யுகே சென்றுவிட்டேன். அங்கு 5 வருஷம் இருந்தேன்.அங்கு மாஸ்டர் ஆப் கொடியோகிராப் செஞ்சேன். டைரக்‌ஷன் கத்துக்கிட்டேன். கொலம்பியா பிக்சர்ஸ்க்கு லொகேஷன் மேனேஜரா வேலை செஞ்சேன்.

வழக்கமாக மத்த நடிகர்களுடன் கம்பேர் செய்து பத்திரிகைளில் எழுதுவார்கள். மீடியாக்களில் பேசுவார்கள். அப்படி பார்த்தால் எங்கள் குடும்பத்தில், வீட்டுக்குள் அது நடக்கும். ராஜூ சுந்தரம் சொல்வதை விட, பிரபுதேவா சொன்னால் உடனே அம்மா, அப்பா கேட்பார்கள். நான் சொன்னால் கண்டுக்கொள்ளவே மாட்டார்கள். அது பணம் செய்கிற விஷயம்தான்.

ஏனென்றால் 3 பேரில் பிரபுதேவா தான் அதிகமாக சம்பாதிக்கிறார். அந்த மரியாதை வீட்டுக்குள்ளேயே தெரிகிறது. இதுதான் உண்மை. நான் யுகே போன சமயத்தில்தான் நிறைய பேர் சினிமாவுக்குள் வந்துவிட்டனர். ஆர்யா, ஜீவா போன்றவர்கள் என்னுடைய இடத்தை பிடித்து விட்டனர். அந்த 5 ஆண்டு கால கட்டத்தில் நான் இருந்திருந்தால், ஏதேனும் வாய்ப்புகள் கிடைத்து ஜெயித்திருக்கலாம் என்று நாகேந்திர பிரசாத் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top