நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா அப்பாவை போலவே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தற்போது தயாராகி விட்டார். நடிகை சமந்தாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுக்கு ஏற்பட்ட காதல் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்தார்.
ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் வேண்டாம் என சமந்தா மறுத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சோபிதா துலிபாலாவுடன் நெருக்கமாக இருந்து வந்த இவர் தற்போது அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் வீட்டில் நாக சைதன்யாவுக்கும் சோவிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திருமண தேதி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நாகச் சைதன்யா குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை சோபிதா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…