விஜயகாந்த்துடன் நடிக்க மறுத்த நதியா.. தனக்கு ஜோடியாக கேரளத்து பைங்கிளியை களமிறக்கிய கேப்டன்..

By Priya Ram on ஏப்ரல் 9, 2024

Spread the love

பிரபல நடிகையான நதியா பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நதியாவுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் கிளாமர் இல்லாமல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நதியா.

   

இந்த நிலையில் சினிமா விமர்சகரான பயில்வான் அளித்த பேட்டியில் நதியா பற்றி கூறியதாவது, இயக்குனர்கள் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினால் நதியா கராராக அதுபோன்ற காட்சிகளை நடிக்க மாட்டேன் என கூறிவிடுவார். நதியாவிற்கு கருப்பான நடிகர் என்றாலே பிடிக்காது.

   

 

அவர் நடித்த எல்லா ஹீரோக்களும் கருப்பானவர்கள் தான். உடனே ரஜினியுடன் அவர் எப்படி நடித்தார் என கேட்கக் கூடாது. சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடிக்காமல் இருந்தால் ஏதாவது பிரச்சனையாகிவிடும் என ராஜாதி ராஜா படத்தில் நடித்தார். கேப்டன் விஜயகாந்த்துடன் இணைந்து நடிப்பதற்கு நதியா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

உடனே நதியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக கேரளாவில் இருந்து நாட்டிய பேரொளியான ஷோபனாவை வரவழைத்து தனது இரண்டு படங்களில் கமிட் செய்தார் விஜயகாந்த் என பல்வான் கூறியுள்ளார். முன்னதாக பூமழை பொழிகிறது என்ற படத்தில் நதியா நடித்தார். அதன் பிறகு அவருடன் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.