தமிழகத்தை உலுக்கிய கோர ரயில் விபத்து.. இரவில் கேட்ட பயங்கர சத்தம்.. பயணிகளின் நிலை என்ன..?

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தமிழகம் வழியாக பீகார் தர்பாங்கை நோக்கி பாக்மதி என்ற பயணிகள் விரைவு ரயில் புறப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தபோது அங்கு இரவு 8.30 மணி அளவில் பிரதான தண்டவாளம் அருகே சரக்கு ரயில்கள் நிறுத்தப்படும் “லூப் டிராக்” என்ற ஓய்வு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென வந்த பாக்மதி விரைவு ரயில் பிரதான தண்டவாளத்தில் இருந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது வேகமாக மோதி தடம் புரண்டது. நொடி பொழுதில் ஏற்பட்ட இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. அது மட்டுமல்லாமல் சில பெட்டிகள் தீப்பிடித்து எறிந்தன. இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் பிறகு சிறிது நேரத்திலேயே ரயில்வே, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 19 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்தால் பயணத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் அருகில் உள்ள மூன்று திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் விபத்து காரணமாக தடம் புரண்ட பெட்டிகளை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர ரயில் விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

41 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

46 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

53 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

58 minutes ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 மணத்தியாலம் ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago