#image_title
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பகத் பாஸில், அமிதாபச்சன், அபிராமி, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. சூப்பர் ஸ்டாரின் படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் வேட்டையன் திரைப்பட முதல் காட்சியை பார்த்தனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜயும் மாறுவேடத்தில் வந்து வேட்டையன் திரைப்படத்தை பார்த்து சென்றார். இந்த நிலையில் வேட்டையன் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் 30 லிருந்து 35 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வேட்டையன் திரைப்படம் 600 தியேட்டர்களில் தான் திரையிடப்பட்டுள்ளதாம்.
ரிலீஸ் ஆகி 2 வாரங்களை கடந்த பிறகும் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படம் 150 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படமும் 100 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவும் வேட்டையன் திரைப்படத்தின் வசூல் குறைவாக இருக்க ஒரு காரணம் என வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்..
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…