பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு நர்சிங் படித்து வந்த இவர், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கணவர் இறந்த நிலையில், கூலி வேலை செய்து இரு மகள்களையும் வளர்த்து வந்த தாய் ராஜேஸ்வரி, ஹரிணியைக் காணாமல் தேடியுள்ளார்.

அதே கிராமத்தில் உள்ள பக்கத்து வீட்டிற்குச் சென்ற ஹரிணி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தாய் மற்றும் கிராம மக்கள் தேடியபோது, வீட்டின் பாத்ரூம் பின்புறம் ஹரிணி கொடூரமான காயங்களுடன் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

   

தனது மகளைப் பக்கத்து வீட்டுக்காரரே கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாக தாய் ராஜேஸ்வரி கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து, முதலாண்டு நர்சிங் மாணவியின் மர்ம மரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.