டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி சோபியா பேகம் (60). இந்நிலையில், வீட்டில் இருந்த சோபியா பேகம் டேபிள் ஃபேனை ஆன் செய்தபோது, எதிர்பாராதவிதமாக அதில் பாய்ந்த பயங்கர மின்சாரம் அவரைத் தூக்கி வீசியது. மின்சாரம் தாக்கித் துடித்த மனைவியைக் காப்பாற்றுவதற்காகக் கணவர் தாவூத் மியா பதறியடித்துக்கொண்டு அவரைத் தொடவே, அவருக்கும் மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரத்தின் கொடூரத் தாக்கத்தால் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தேவருகொண்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.