ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த லாட்ஜில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சகலேஷ்பூரில் உள்ள கிராபோர்ட் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

இளம்பெண்ணின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவர் யார், எதற்காக அந்த லாட்ஜிற்கு வந்தார், அவருடன் யாரேனும் தங்கினார்களா என்பது குறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து மர்ம மரணம் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.