தகராறா..? தற்கொலை முயற்சியா…? ஹோம்ஸ்டேயில் இளம்பெண் மர்ம மரணம்… மயங்கிய நிலையில் காதலர்… பெங்களூருவில் பெரும் பரபரப்பு…!!

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

பெங்களூரு அருகே உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையிலும், அவருடைய ஆண் நண்பர் மயங்கிய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்த பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்றும், அவருடன் இருந்த நபர் அவரது காதலர் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து ஒருவித விஷத் திரவத்தின் வாசனை வீசியதாகத் தெரிகிறது. பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொள்ள முடியாததைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு கதவை உடைத்துப் பார்த்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவரது ஆண் நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது கொலையா அல்லது காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.