மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலமான நடிகராவார். ஆரம்பத்தில் பாய்ஸ், காதல் எப்எம், கிச்சா வயது 16 போன்ற திரைப்படங்களில் தோன்றியிருக்கிறார். பின்னர் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார் மணிகண்டன். இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது தான். அந்த படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் மணிகண்டன்.

அதற்குப் பிறகு அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. குட் நைட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் மணிகண்டன். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மணிகண்டன். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மணிகண்டன் மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர். இவரது படங்களில் எல்லாமே பக்கத்து வீட்டு பையன் போல் நடிப்பார். அதனால் பார்வையாளர்களுடன் ஈஸியாக கனெக்ட் ஆகி விட்டார் என்று சொல்லலாம். இவரது அடுத்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தான் இவரை மக்கள் இப்போது விரும்புகிறார்கள். இவரது குடும்பஸ்தன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது அம்மா அப்பா பற்றி ஒரு நேர்காணலில் எமோஷனலாக பேசியிருக்கிறார் மணிகண்டன்.

மணிகண்டன் கூறியது என்னவென்றால், என்னுடைய அம்மா அப்பாவிற்கு நான் சினிமாவிற்கு வந்தது ஏமாற்றம்தான். அவர்கள் நான் நல்லா படிச்சு நல்ல ஒரு ஆபீஸ் வேலைக்கு போகணும் கையில லன்ச் பாக்ஸ் எல்லாம் எடுத்துட்டு டீசென்டா போகணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனா நான் இப்படி சினிமால வந்தது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கவே இல்லை. என்னைக்குமே என்ன அவங்க பாராட்டுனது கிடையாது. நான் எதாவது சினிமா சம்பந்தமா ஆர்வமா வீட்ல போய் சொன்னா அதை கண்டுக்கவே மாட்டாங்க எமோஷனாக பேசி இருக்கிறார் மணிகண்டன்.
