சாம் CS தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார் சாம் CS. மூணாறில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த சாம் CS தேனியில் படிப்பை முடித்தார். சிறுவயதிலிருந்த இசையில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.

2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சாம் CS. அதை தொடர்ந்து விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், கொரில்லா, தேவி 2 போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் சாம் CS. இது தவிர பல பாடல்களையும் பாடி இருக்கிறார் பாடல் ஆசிரியராகவும் பாடலை எழுதியிருக்கிறார் சாம் CS.
இவரை மிகவும் பிரபலமாக்கியது 2024 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தது தான். அதிலிருந்து தற்போது சற்று பிரபலமாகி பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாம் CS. அந்த வகையில் வணங்கான், மதராஸ்காரன் அடுத்து இன்னும் பல திரைப்படங்களுக்கு கமிட் ஆகி வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருக்கிறார் சாம் CS. தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சாம் CS சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

சாம் CS கூறியது என்னவென்றால், இப்போது ஒரு பாடலை ஹிட்டாக வேண்டும் என்றால் அதற்காக பெரும் அளவு செலவு செய்கிறார்கள். பிரமோஷன் செய்கிறார்கள். ஆனால் நான் என்னுடைய எந்த பாடலுக்கும் பிரமோஷன் செய்வது இல்லை. அதுமட்டுமல்லாமல் சினிமாவில் பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்கு முதலில் யார் போன் பண்ணாலும் போனை எடுக்கக்கூடாது எப்போதும் பிஸியாக இருப்பது போல் காட்ட வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை நான் எப்போதும் இருப்பது போல் தான் என்னால் இருக்க முடிகிறது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சாம் CS.
