எம்ஜிஆர் படத்திற்கு நல்லதுக்கு காலமில்லை என்று பெயர் வைத்த வசனகர்த்தா… தான் தங்க தலைவர் என நிரூபித்த புரட்சி தலைவர்…

By admin on மாசி 3, 2025

Spread the love

எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம் ஜி ஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கான தனி பாதையை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தவர் எம்ஜிஆர்.

   

குடும்ப வறுமைக்காக தான் படிக்க வேண்டும் என்ற ஆசையை கூட நிராகரித்துவிட்டு நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர். பின்னால் நடிகராக உயர்ந்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகள், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர், நல்ல தலைவர். தொண்டர்களுக்காக மக்களுக்காக எதையும் செய்யக்கூடியவர். இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்று சொல்லலாம். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.

 

எம்ஜிஆர் ஒரு படத்தில் திருடனாக நடித்துக் கொண்டே இருந்தார். அப்போது அந்த படத்திற்கு ஏற்ற தலைப்பு வைக்க வேண்டும் என்ற பட குழுவினர் அனைவரிடமும் கூறி யார் சரியான தலைப்பை தருகிறார்களோ அவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் தருகிறேன் என்று கூறியிருந்தார். அப்போது படத்தின் வசனகர்த்தா இரண்டு தலைப்புகளை எழுதிக் கொண்டு எம்.ஜி.ஆர் இடம் கொடுத்திருந்தார். ஒன்று நல்லதுக்கு காலமில்லை என்ற பெயரை காட்டினார். ஆனால் எம்ஜிஆர் இது சரிவராது என்று கூறினார். ஏன் நீங்கள் நடித்த கதாபாத்திரத்துக்கு இந்த தலைப்பு தானே சரியாக வரும் என்று கேட்டார் வசனகர்த்தா.

இந்த தலைப்பை வைத்து நான் நடித்தால் மக்கள் எம்ஜிஆரே நல்லது காலமில்லை என்ற சொல்லிவிட்டார் என்று அனைவரும் தவறு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். என்னுடைய தலைப்பும் சரி படமும் சரி மக்களுக்கு நல்வழியை காட்டுவதாக தான் இருக்க வேண்டும் என்று கூறினார். அடுத்ததாக அந்த வசனகர்த்தா தான் வைத்திருந்த இரண்டாவது தலைப்பை காட்டினார். அது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போனது. அந்த தலைப்பு தான் திருடாதே. அந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததன் மூலம் எம்ஜிஆர் தான் ஒரு தங்க தலைவர் என்று நிரூபித்து இருக்கிறார். மக்களுக்காக சிறு சிறு விஷயங்களையும் யோசித்து செய்பவர் எம்ஜிஆர்.