என் அண்ணன் படம் எடுக்கும் போது இதை பண்ணவே மாட்டார்… ஆதங்கமாக பேசிய பிரேம்ஜி…

By admin on புரட்டாதி 13, 2024

Spread the love

மூத்த இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் தான் பிரேம்ஜி. இவரது மூத்த சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபு பெரியப்பா இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த பிரேம்ஜி அமரன் யுவன் சங்கர் ராஜா இசைஞானி இளையராஜா அவர்களுடைய ஸ்டுடியோவில் பின்னணியில் இசையமைக்கும் பணியில் இருந்தார்.

   

யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் ராப் பாடல்களை பாடியுள்ளார் பிரேம்ஜி. 2006 ஆண்டு சிலம்பரசன் நடித்த வல்லவன் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரேம்ஜி. அதைத்தொடர்ந்து அவரது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

அடுத்ததாக மறுபடியும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சரோஜா, மங்காத்தா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் பிரேம்ஜி. அடுத்ததாக சேட்டை, கோவா, சென்னை 600028 பாகம் 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார் வெங்கட் பிரபு. இவரின் என்ன கொடுமை சார் இது அப்படிங்கிற டயலாக் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

 

தற்போது வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் டித்திருக்கும் பிரேம்ஜி தனது அண்ணன் வெங்கட் பிரபு அவர்களை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் என் அண்ணன் படம் எடுக்கும்போது முழுசா கதையை எதுவுமே சொல்லவே மாட்டாரு.

சூட்டிங் போறப்போ எங்களுக்கே கதை பத்தி பாதி புரியாது நிறைய சஸ்பென்சா தான் எங்களுக்கே இருக்கும். மங்காத்தா படத்தில் அர்ஜுன் வர்ற சீன் கூட அப்படிதான். அது எங்களுக்கு தெரியவே தெரியாது. இப்படித்தான் எங்க அண்ணன் எப்பவுமே பண்ணுவாரு ஒரு படத்தை முழுசா என்கிட்ட சொல்லவே மாட்டார் என்று ஜாலியாக பேசி இருக்கிறார் பிரேம்ஜி.