பிரபல நடிகையான ரோஜா கடந்த 1992-ஆம் ஆண்டு ரிலீசான செம்பருத்தி திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் இணைந்து ரோஜா ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் உழைப்பாளி, அதிரடி படை, ஆயுத பூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் ரோஜா நடித்துள்ளார்.
ரோஜாவுக்கு மூன்று நந்தி விருதுகளும், தமிழக அரசின்விருதுகளும் வழங்கப்பட்டது. ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ரோஜா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக இருந்தார். இவர் ஆந்திர சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் ரோஜா தோல்வியை சந்தித்தார்.
அவருக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட பானு பிரகாஷ் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அடுத்து மீண்டும் தான் அரசியலில் பதவி வகிக்க 5 ஆண்டு காலம் ஆகும் என்பதால் ரோஜா சினிமாவில் நடிக்கலாம் என்ற ஐடியாவில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.