விஜய்யின் கடைசி படம்.. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “தளபதி 69”.. சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா?.. ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!

By Nanthini on புரட்டாதி 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜயின் கடைசி படமான தளபதி 69 படம் குறித்து அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கே வி என் ப்ரொடக்ஷன் நிறுவனம் இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தமிழ் திரை உலகில் முதல்முறையாக கே வி என் ப்ரொடக்ஷன் கம்பெனி கால் பதிக்கிறது. தமிழில் தங்களுடைய முதல் படத்தை தயாரிக்க உள்ள நிலையில் முன்னணி நாயகனாக திகழும் விஜயை வைத்து தயாரிக்க முன்வந்துள்ளனர்.

   

விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக படத்தின் பட்ஜெட், விஜயின் சம்பளம் மற்றும் படத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் 90ஸ் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி 69 படத்திற்கு விஜய் சம்பளம் மட்டுமே 275 கோடி எனவும் கூறப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டியும் தயாரிப்பு நிறுவனமே செலுத்த ஒப்பு கொண்டுள்ளது. விஜயின் சம்பளத்திற்காக மட்டும் தயாரிப்பு நிறுவனம் 300 கோடி வரை செலவு செய்கிறது.

   

 

மொத்தத்தில் இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் என்பது உறுதியாகியுள்ள நிலையில் இன்று மாலை வெளியாகும் அறிவிப்பின்போது படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலும் இடம் பெறும் என கூறப்படுகிறது. விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ள நிலையில் இந்தப் படம் தான் அவருடைய சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. மேலும் தளபதி 69 படத்திற்கு அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.