மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனப்படும் MGR தென்னிந்தியாவின் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவரை மக்கள் புரட்சித் தலைவர் என்று அன்போடு அழைத்தனர். 1977 முதல் 1987 இல் இறக்கும் வரை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி செய்து வந்தவர் MGR.
அவரது இளமைப் பருவத்தில் MGRரும் அவரது மூத்த சகோதரர் எம் ஜி சக்கரபானியும் குடும்ப வறுமைக்காக நாடகத்தில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் MGR. 1940 மற்றும் 50களில் தமிழ் சினிமாவில் MGR சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஆகிய மூவரும் மூவேந்தர்களாக வலம் வந்தனர்.
சிவாஜி கணேசன் குடும்பம் சமுதாயம் ஆகிய படங்களிலும் ஜெமினி கணேசன் காதல் படங்களிலும் MGR அதிரடி படங்களிலும் நடித்து பிரபலமானவர்கள். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டானவைகள் தான். தனது திரைப்படங்களில் சமூக நீதி கருத்துக்களையும் திராவிட சிந்தனைகளையும் அதிகம் பேசுபவர் MGR நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றி வந்த MGR ஒரு கட்டத்திற்கு பிறகு தானே கட்சி ஆரம்பித்து அதை வெற்றிகரமாகவும் நடத்தி வந்தவர்.
MGR சரோஜாதேவி ஜெயலலிதா போன்ற பல நடிகைகளுடன் நடித்ததுள்ளார். இவருடன் நடிக்க அனைத்து நடிகைகளும் விரும்புவர். சிறந்த நடிகனாக மட்டுமல்லாமல் நல்ல மனிதனாகவும் வாழ்ந்திருக்கிறார் MGR. அதற்கு சான்றாக ஒரு படத்தின் சூட்டிங் போது நடந்த சம்பவத்தை இனி பார்ப்போம்.
ஊட்டியில் என் அண்ணன் திரைப்பட சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது நிறைய மக்கள் சூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறுமி கழிவறை தொட்டிக்குள் விழுந்து விட்டார். உடனே சூட்டிங்கை பாதியில் நிறுத்திய MGR துப்புரவு தொழிலாளர்களை அழைத்து அந்த சிறுமியை காப்பாற்றினார். சிறுமியின் தந்தை MGR காலில் விழுந்து வணங்கி சென்றார். பின்னர் மறுநாள் துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் சேர்ந்து MGRக்கு மரியாதை செய்வதற்காக சூட்டிங் நடந்த இடத்திற்கு வந்தனர். எம்ஜிஆரை பார்த்து பேசி விட்டு உங்களுக்காக நாங்க மாலை வாங்கி வந்திருக்கிறோம் ஐயா நீங்க வாங்கிகுவீங்களா அப்படின்னு கேட்ட துப்புரவு தொழிலாளிடம் அதனால் என்ன நீங்களே போட்டு விடுங்க அப்படின்னு தலையை குனிந்து நின்றாராம் MGR.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒரு துணை நடிகர் என்னங்க இப்படி துப்புரவு தொழிலாளர்கள் கொடுக்கிற மாலை எல்லாம் வாங்கிட்டு கழுத்துல போட்டு அதை கைலயும் கொண்டு வரீங்களே அப்படின்னு கிண்டல் அடித்திருக்கிறார். உடனே சற்று கோபமடைந்த MGR அதனால் என்ன மாலை மணக்க தான் செய்கிறது ஒன்னு நாறலையே அப்படின்னு ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்து இருக்கிறார் MGR.