#image_title
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. முதலில் பாரதிராஜா சிவாஜி கணேசனிடம் படம் பற்றி கூறும்போது அண்ணா இந்த படத்துல உங்களுக்கு மேக்கப் எதுவும் கிடையாது.
லொகேஷன் சொல்லுவோம் நீங்க அங்க வந்து நான் சொல்ற மாதிரி உட்கார்ந்து எழுந்து நடந்தா போதும் அப்படின்னு சொல்லி இருக்காரு. இரண்டு மூன்று நாள் ஷூட்டிங்கில் சிவாஜி பாரதிராஜா சொன்னபடியே நடந்து கொண்டார். பின்னர் அவரிடம் சென்று நீங்க என்ன படம் எடுக்குறீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல அப்படின்னு சொல்லி இருக்காரு. உடனே பாரதிராஜா அண்ணே இப்ப நான் படமாக்கி கொள்கிறேன்.
அந்த படத்தை உங்களிடம் போட்டு காண்பிக்கிறேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று சொல்லி இருக்காரு. பாரதிராஜா நினைத்தபடியே சிவாஜிகணேசன் முதல் மரியாதை படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டார். சிவாஜி கணேசன் படம் எப்படி வருமோ என அச்சத்தில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர் இளையராஜாவும் இந்த படம் ஓடாது என கூறியுள்ளார்.
ஷூட்டிங் முடிந்த பிறகு ஒருநாள் பாரதிராஜா சிவாஜி கணேசனுக்கு படத்தை போட்டு காண்பித்துள்ளார். படம் முடிந்த பிறகும் சிவாஜிகணேசன் அவரது இருக்கையில் இருந்து எழுந்திருக்கவே இல்லையாம். அப்படியே படத்தை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த படம் சூப்பராக வரும் என சிவாஜி கணேசன் கூறியுள்ளார். பாரதிராஜாவும் சிவாஜிகணேசனும் நினைத்தபடி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
அசாமின் தேமாஜி மாவட்டம் ஜோனை நகரில் உள்ள தெலாம் பஜாரில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு…
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…