#image_title
நடிகை அர்த்திகா பிளாக் அண்ட் வொயிட் படத்தில் கார்த்திகேயன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகை அர்த்திகாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனது கணவருடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அர்த்திகா கூறியதாவது, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் ஒரு கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். இவர் கடைக்கு அடிக்கடி வருவதால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவருக்கு என் மேல் காதல் இருந்தது. முதலில் அதை அவர் சொல்லவில்லை. என்னை காதலிப்பதால் அவர் கூறவில்லை. வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக என்னிடம் கூறினார். அப்போது நண்பர்களாக பழகியதால் எனக்கு அது பெரிதாக தெரியவில்லை. அதன் பிறகு தான் காதலிக்க ஆரம்பித்தோம்.
நான் கிறிஸ்டியன். அவர் ஹிந்து. எங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது. பின்னர் வீட்டில் பேசி திருமணம் செய்து கொண்டோம். முதலிலேயே என் அம்மா இது காதலில் தான் முடிய போகிறது என என்னை எச்சரித்தார். ஆனால் எப்படியோ காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பின்னர் நிகழ்ச்சியில் உங்கள் கணவரிடம் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த அர்த்திகா நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இவர் கால் பண்ணிக்கிட்டே இருப்பார்.
நான் எடுக்கலைன்னா ஏன் எடுக்கல என்ன ஏதுன்னு கேட்பார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷனா இருப்பேன். அப்ப நான் கால் எடுக்கலைன்னா இதுதான்னு அவரு புரிஞ்சுக்கணும். கிடைக்கிற ஃப்ரீ டைம்ல பேசணும்னு நினைப்பார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்ல பிஸியா இருக்குறனால என்னால கால் அட்டென்ட் பண்ணி பேச முடியாது. அது அவர் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். சில நேரம் கோவம் வந்துரும். நான் திட்டி விடுவேன். என்னோட வேலை நேரத்தை புரிஞ்சுகிட்டு அட்ஜஸ்ட் பண்ணினாலே போதும் என ஓப்பனாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…