#image_title
நடிகர் தாடி பாலாஜி ஒரு பேட்டியில் தான் ஐந்து பெண் குழந்தைகளை படிக்க வைப்பதாக கூறியிருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
90’ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் முன்னணி காமெடி நடிகர்களாக வளம் வந்த வடிவேலு, விவேக் ஆகியோர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கின்றார்.
அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பல சீசன்களாக நடுவராக இருந்து வந்தார். பின்னர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். இதன் மூலமாக தான் இவருக்கும் இவரது மனைவிக்கும் இருந்த பிரச்சனையே வெளியில் தெரியவந்தது .
அந்த நிகழ்ச்சியின் முடிவில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து விடுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் தற்போது வரை இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பெரிதளவில் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத தாடி பாலாஜி சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் நடைபெற்ற நீர்ப்பந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருக்கும் தனது கையால் உதவி பொருட்களை கொடுத்திருந்தார்.
மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீர் மோர் பந்தல் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். இப்படி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறிய இருப்பதாவது தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களிடம் நான் உதவி செய்யாமல் இருப்பது கிடையாது. அதிலும் படிப்பதற்கு பணம் இல்லை என்று கேட்பவர்களுக்கு கட்டாயம் உதவி செய்து வருகிறேன்.
ஒருமுறை ஒரு அம்மா தன்னிடம் தன் குழந்தைக்கு பீஸ் கடை முடியவில்லை என்று உதவி கேட்டார் . நான் மறுநாளே அவருக்கு பீஸ் கட்டுவதற்கு தேவையான பணத்தை ரெடி பண்ணி கொடுத்தேன். நம் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்வோமோ அதில் கொஞ்சம் மற்ற குழந்தைகளுக்கு செய்வதில் தவறில்லை என்று கூறியிருந்தார். ஓபனாக சொல்ல வேண்டும் என்றால் நான் இதுவரை ஐந்து பெண் குழந்தைகளுக்கு பீஸ் கட்டி இருக்கின்றேன்.
மேலும் பல பெண் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்திருக்கின்றேன். அது என்னவோ தெரியவில்லை பெண் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…