கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இசையமைப்பாளர்…!!! குவியும் வாழ்த்துக்கள்…!!!

By Begam

Published on:

யுவன் சங்கர் ராஜா புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். தமிழ் திரைப்படத் துறையில் இசை கலைஞராகவும், பின்னணி பாபாடகராகவும் ,பாடல் ஆசிரியராகவும் என பணி புரிகிறார் யுவன் சங்கர் ராஜா.

   

மேலும் தமிழ் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர்.  ‘அரவிந்தன்’ என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானர் .’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின்  இசை மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானார். 2014 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

ஜஃபர் நிஷா இன்று இஸ்லாமிய பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த சில படங்கள் தோல்வியை தழுவின.பின்னர்  அவர் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இப்படத்தில் ‘இரவா பகலா’ ‘சுடிதார் அணிந்து’ போன்ற பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தது .பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை ,நந்தா, மௌனம் பேசியதே ,புன்னகைப் பூவே, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், சண்டக்கோழி, கேடி, திமிரு, பில்லா ,காதல் சொல்ல வந்தேன், நான் மகான் அல்ல என்று இவர் இசையமைத்த வெற்றி படங்கள் ஏராளம்.

இவர் வாங்கிய விருதுகளும் ஏராளம். தற்பொழுது சத்யபாமா பல்கலைக்கழகத்திடம்  இருந்து கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.