தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர்தான் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கேரள மாநிலம் மூணாறில் பிறந்த இவர் தேனியில் உள்ள கம்பத்தில் வசித்து வருகின்றார். பட்டப் படிப்பை முடித்த பிறகு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் திசை மீது கொண்ட ஆர்வத்தால் சாஃப்ட்வேர் வேலையை விட்டு விலகினார். ஓர் இரவு படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம் வேதா திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் தனக்கான இடத்தை பிடித்தார். இந்த திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கேட்டரி போன்ற படங்களுக்கு இசையமைத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களுக்கும் இசையமைத்து வருகின்றார். இறுதியாக புஷ்பா 2 படத்திற்கு இவர் பின்னணி இசை அமைத்திருந்தார். தற்போது தொடர்ந்து பல சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார். இப்படியான நிலையில் சாம் சிஎஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னோட பாட்ட பார்த்துட்டு என்னோட பசங்களே கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்கப்பா என்று என்கிட்ட சொல்லுவாங்க. நாம்ப எப்பவும் தொடர்ந்து ஒரே மாதிரியா கொடுத்துட்டு இருக்கக் கூடாது.

இப்ப இருக்கிற ஜெனரேஷன்ல கேட்கிற பாட்டு எல்லாமே vibe பண்ற மாதிரி வேற லெவலுக்கு இருக்கு. ஆனா vibe பாட்டை கேட்கிறவனோட எனர்ஜி இருக்கிற வெறும் இருபது நிமிஷம் வரைக்கும் தான் இருக்கும். அதுக்குள்ள அந்த பாட்டு முடிஞ்சு போச்சு அவ்வளவுதான். இதற்கு முன்பும் தேவா சார் குத்துப்பாட்டு போட்டா இந்த பக்கம் ஏ ஆர் ரகுமான் மெலோடி போடுவார். எல்லாத்தையும் அப்ப இருக்கவங்க ரொம்ப ரசிச்சாங்க. எல்லா கம்போசரும் பண்ற பாட்டு சூப்பரா இருக்கும். அந்த காலத்துல இத்தனை பேர் இருந்தும் வேற வேற விதமா பாட்டு கொடுத்தும் எல்லாத்தையும் மக்கள் ரசிச்சாங்க. ஆனா இன்னைக்கு 50 கம்போசர்ஸ் இருந்தும் யாரோட பாட்ட நீங்க ரசிச்சு கேப்பிங்க என்றால் யாருமே இல்ல.

இன்னைக்கு ஒரு பாட்டு இல்லனா இன்னொரு பாட்டு என்று நிறைய ஆப்ஷன் மக்கள் கிட்ட இருக்கு. இன்னைக்கு ஒரு மியூசிக் ஓட குவாலிட்டி ரொம்ப ரொம்ப கீழ போச்சு. அடுத்த ஒரு வருஷத்துக்கு தொடர்ந்து மெலோடி சாங் கொடுத்து பாருங்க ரசிகர்களின் திசை திரும்பி எல்லோரும் விரும்ப ஆரம்பிச்சுருவாங்க. அந்த காலத்துல எல்லா இசையும் சேர்ந்து தான் கேட்டாங்க நல்லா தான் இருந்துச்சு. ஆனா இன்னைக்கு எல்லாமே மாறிடுச்சு. எல்லா பாட்டுமே ஒரே மாதிரி வந்தா யார் ரசிப்பாங்க என்று இன்றைய காலை இசை குறித்து சாம் சி எஸ் பேசியுள்ளார்.
