உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு ஆர்டர்க்கும் வாங்கும் சம்பளம் என்ன… அவர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா…?

By admin on மாசி 4, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் உணவு டெலிவரி பிசினஸ் பிரபலமாக நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் இருந்தே உணவு, வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள் என அனைத்தையுமே ஆன்லைனில் Swiggy, Zomato, Zepto, Blinkit போன்ற டெலிவரி ஆப்கள் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.

   

இந்த டெலிவரி ஆப்கள் மக்களின் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வதோடு பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தருகிறது. டெலிவரி ஆப்புகளில் நாம் ஆர்டர் செய்யும் போது ஒவ்வொரு ஆர்டருக்கும் ஊழியர்கள் எவ்வளவு வருமானம் பெறுகின்றனர், அந்தெந்த நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக கொடுக்கும் வசதிகள் என்னென்ன என்று தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.

   

டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு ஆர்டர்களுக்கு அடிப்படையான ஊதியத்தை பெறுகிறார்கள். சிலர் ஆர்டர் கொண்டு செல்லும் தூரத்தின் அடிப்படையிலும் அவர்களது ஊதியம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆடருக்கும் ஊழியர்களுக்கு ரூபாய் 30 முதல் ரூபாய் 100 வரை வழங்கப்படுகிறது. அதாவது தூரம் அதிகமாக இருந்தால் ரூபாய் 50 முதல் 500 வரை டெலிவரி ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

 

இது மட்டுமல்லாமல் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு விபத்து ஏதும் ஏற்பட்டால் அவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அந்த நிர்வாகமே பொறுப்பேற்று கொள்கிறது. பொருட்களை டெலிவரி செய்யும் போது டெலிவரி ஊழியர்கள் ஏதேனும் பிரச்சனை செய்தால் அவர்களுக்கு எதிராக புகார் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வசதி இருப்பது போல் வாடிக்கையாளர்கள் தவறுகள் செய்தால் டெலிவரி ஊழியர்கள் புகார் செய்வதற்கான வசதிகளும் ஒரு சில இடத்தில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் அனைத்து டெலிவரி ஊழியர்களுக்கும் காப்பீட்டையும் வழங்கி இருக்கிறார்கள். இந்த காப்பீட்டுக்காக ரூபாய் 1500 முதல் 2000 வரை பிடித்தம் செய்து கொள்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் டெலிவரி ஊழியர்களின் வேலையும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பெருவாரியான மக்கள் இந்த ஆப்புகளை பயன்படுத்தி தான் ஒவ்வொரு தினத்தையும் கடக்கிறார்கள். இந்த டெலிவரி பிசினஸ்க்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.