இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும் என்றால் அதற்கு திட்டமிட்டு பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். மக்களும் இதை புரிந்து கொண்டு பல்வேறு இடங்களில் தங்களை பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும் முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக வங்கிகளும் தபால் நிலையங்களும் எல் ஐ சி போன்ற நிறுவனங்களும் பல சலுகைகளுடன் அதிக வட்டி விகிதத்துடன் பல திட்டங்களை வைத்திருக்கிறது. அப்படி LIC – இன் ஒரு அசத்தலான திட்டத்தை பற்றி இனி காண்போம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான LIC வித விதமான பாலிசிகளை வழங்கி வருகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. அதனால் LIC இல் பணத்தை நாம் முதலீடு செய்யும் போது அதனால் ரிஸ்க் நமக்கு குறைவு உத்திரவாதமான வருமானம் கிடைக்கும். தற்போது LIC நிறுவனம் புதிய என்டோவ்மென்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தத் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 71 முதலீடு செய்தால் உங்களுக்கு மெச்சூரிட்டி தொகையாக ரூபாய் 48 லட்சம் வரை கிடைக்கும். இந்த திட்டத்தில் பாலிசியை பெறுவதற்கு குறைந்தபட்சமாக எட்டு வயது முதல் அதிகபட்சமாக 55 வயது வரை இருக்க வேண்டும். இந்த பாலிசியின் கால அளவு 12 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. காப்பீட்டு கால அளவை மக்கள் தங்களின் வசதிக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

LIC இன் இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூபாய் ஒரு லட்சம் ஆகும். நீங்கள் மாதந்தோறும் டெபாசிட் செய்ய வேண்டும் என்று விரும்பினால் நாளொன்றுக்கு ரூ 71 முதலீடு செய்யும்போது மாதம் ரூபாய் 2130 முதலீடு தொகையாக இருக்கும். இந்த டெபாசிட்டை நீங்கள் 35 ஆண்டுகள் செய்யும்போது முதிர்வுக்கு பிறகு உங்களுக்கு 48 லட்சம் ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் மேற்படி தகவலுக்கு LIC இணையதளத்தை பார்வையிடலாம்.
