சிம்புவுக்காக காசே வாங்காமல் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி கொடுத்த நடிகை.. அட, இவங்க கண்ணாலே ரசிகர்களை கைது செஞ்சவங்களாச்சே..!

By Soundarya on மாசி 4, 2025

Spread the love

இந்திய பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான  தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். சாந்தி என்றார் தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார்.

   

மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் “மோனா” என்றழைக்கப்பட்ட “மந்திரா” முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர் நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் சூப்பராக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி தமிழகத்தில் புகழ்பெற்றார்.

   

 

இந்த படத்தை பொறுத்தவரைக்கும் மந்தராவை ஒரு காட்சிக்கு தான் ஒப்பந்தம் செய்தார்களாம். ஆனால் சிக்கலான காட்சி. அந்த காட்சியில் முழு ஒத்துழைப்போடு நடித்து கொடுத்தாராம். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ஆட வேண்டியது இருந்ததாம். அதில் மந்திரா ஆடினால் நன்றாக இருக்கும் என்று சிம்புவுக்கு தோன்றியதால் அதில் ஆட சொன்னார்களாம். அதில் ஆட அவர் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பெருந்தன்மையாக சம்பளமே வாங்காமல் சிம்புவுக்காக ஆடி கொடுத்தாராம்.