தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகசிறந்த குணசித்திர நடிகைகளில் ஒருவர் பாரதிராஜாவால் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மெல்ல மெல்ல மிக பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் வடிவுக்கரசி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான அனுபவம் குறித்து பேசி உள்ளார். அதில், நான் படம் பண்ணலாம் என்று முடிவு செய்ததும் விஜயகாந்த் சார் கிட்ட போய் சொன்ன. உடனே அவரு நீங்க இப்போ மோகன் கூட தான நடிச்சுட்டு இருக்கீங்க அவர்கிட்ட போய் கேளுங்க நல்ல ஹீரோ பண்ணி தருவாரு என்று சொன்னாரு. நானும் அவர்கிட்ட கேட்டதும் அவ ரெண்டு வருஷத்துக்கு முடியாதுன்னு சொல்லிட்டாரு. உடனே விஜயகாந்த் கிட்ட போய் இந்த விஷயத்தை சொல்லி அவரையே நடிக்க சொன்ன.

கொஞ்சம் யோசிச்சு அவரு பிறகு ஓகே சொல்லிட்டாரு. பிறகு கதை சொல்ல சொன்னதும் நானும் சொன்னேன். சரி எனக்கு கதை பிடிச்சிருச்சு நானே நடிக்கிறேன் என்று ஓகே சொல்லிட்டாரு. என்னை சினிமாவில் ப்ரொடியூசர் ஆகிவிட்டதே விஜயகாந்த் சார் தான். அவரே அவ்வளவு பெரிய ஹீரோ இருந்தாலும் மோகன் கிட்ட போய் கேளுங்க என்று அவ்வளவு பெருந்தன்மையா சொன்னாரு. அவர் நடிச்சு கொடுத்த அந்தப் படத்தால எனக்கு பெருசா எந்த நஷ்டமும் ஏற்படல. பெங்களூர்ல மட்டும் அவர் படத்த விநியோகம் பண்ணிட்டு மத்த எல்லா ஏரியாவுல இருந்தும் அவர்தான் எனக்கு விநியோகஸ்தர்களை கொண்டு வந்தார். சினிமாவுல எனக்கு அந்த அளவுக்கு அவரு சப்போர்ட் பண்ணாரு என வடிவுக்கரசி விஜயகாந்த் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
