தளபதி படத்தின் “ராக்கம்மா கையத்தட்டு” பாடல் ரெக்கார்டிங்கை திடீரென நிறுத்திய மணிரத்தினம்.. சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த இளையராஜா..!

By Nanthini on பங்குனி 31, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இளையராஜா இயக்குனர் ஜாம்பவான் மணிரத்தினம் இருவருமே ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பது திரைத்துறையில் இதுவரை பலரும் அறியாத ஒரு தகவலாக உள்ளது. 90 காலகட்டத்திற்கு முன்பு மணிரத்தினம் இயக்கிய அனைத்து பாடல்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்தார். மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி திரைப்படம் தான் இளையராஜா மற்றும் மணிரத்தினம் இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் ஆகும். 1983 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பல்லவி அணு பல்லவி என்ற திரைப்படம் மூலமாக இணைந்த மணிரத்தினம் மற்றும் இளையராஜா கூட்டணியில் 9 படங்கள் வெளியாகி உள்ளது.

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் உருவான க்ளாசிக் பாடல்கள் : உங்களுக்கு  பிடித்தது எது?

   

இந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த கடைசி இயக்குனர் மணிரத்தினம் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு ஒரு மறக்க முடியாத திரைப்படத்தை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் மணிரத்தினம். அந்த திரைப்படம் தான் தளபதி. இந்த படத்தில் இளையராஜாவின் இசை இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக இசையமைத்திருந்தார்.

   

Rakkamma Kaiya Thattu Lyrics in Tamil

 

காதலாக இருந்தாலும் உணர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தாலும் இளையராஜாவின் ட்யூன் இல்லாமல் தளபதி திரைப்படம் சிறப்பாக வந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற “ராக்கம்மா கையத்தட்டு” பாடலின் ரெக்கார்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இளையராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டு பாடல் வரிகள் அனைத்தும் எழுதப்பட்டு பாம்பேயில் ரெக்கார்டிங் செய்ய ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் தயாராகி விட்டோம்.

Rakkamma Kaiya Thattu - HD Video Song | ராக்கம்மா கையதட்டு | Thalapathy |  Rajinikanth | Ilayaraaja

அனைத்தும் தயாராகி டேக் என்று சொல்லும் போது மணிரத்தினம் அங்கு வந்திருந்தார். அப்போது இந்தப் படத்தில் தான் முதல்முறையாக ஹீரோயினியை அறிமுகம் செய்யப் போகிறேன் அதனால் பாட்டில் ஹீரோயினியை புகழும் அளவுக்கு மெலோடியாக சில வரிகள் இருக்க வேண்டும் என்று கூறினார். உடனே என்னுடைய அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு சில வரிகளை கூற சொல்ல குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில்
குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால்
மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே என்று கூறினான். அதன் பிறகு அதற்கு டியூன் போட்டு ஆர்கெஸ்ட்ரா குழுவினருடன் சேர்ந்து பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டது. அந்தப் பாட்டிற்கு நடுவில் இந்த வரிகள் வந்ததும் அவர்கள் அனைவருமே ஆடிப் போய்விட்டனர் என்று இளையராஜா பேசியுள்ளார்.