தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான முரளி நடிப்பில் வெளியான இதயம் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஹீரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அஜித்தை உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் அந்த காதல் கை கூடாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நடிகை ஹீராவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த காரணத்தால் அவர் சிறுவயதில் இருந்தே ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த ஹீரா, பிறகு மாடலின் மீது ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்தார்.

முதலில் இவருக்கு ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு வர அதனை மறுத்துவிட்ட நிலையில் 1991 ஆம் ஆண்டு கதிர் இதயம் திரைப்படத்தின் கதையை கூற தயாரிப்பாளரும் கதையை கூறிய நிலையில் ஹீராவிற்கு கதை பிடித்து போக இதயம் திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தமிழைத் தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 49க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த இதயம், நீ பாதி நான் பாதி, சதிலீலாவதி மற்றும் அவ்வை சண்முகி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த காலத்தில் நடிகர் சரத்குமார் ஹீராவுடன் சேர்ந்து நம்ம அண்ணாச்சி, தசரதன், பேண்ட் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஹீராவை சரத்குமார் விழுந்து விழுந்து காதலித்த நிலையில், எப்போதுமே ஹீரா சிரித்து சிரித்து ஜாலியாக பேசக்கூடிய குணம் கொண்டவர் என்பதால் தன்னை காதலிப்பதாக சரத்குமார் நினைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பேண்ட் மாஸ்டர் திரைப்படத்தில் சரத்குமார் உடன் நடித்து முடித்த பிறகு ஹீரா சில நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார் எதற்காக நெருக்கமான காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்று கேட்டதால் ஹீராவிற்கும் சரத்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை.

அதன் பிறகு ஹீரா தொடரும் என்ற பக்கத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. என்னதான் அஜித் பத்தாவது படித்திருந்தாலும் ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடியவர். இதனால் இருவருமே படப்பிடிப்பு தளத்தில் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கி சினிமா நிகழ்ச்சி மற்றும் பொது இடத்தில் கைகளை கோர்த்துக்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிய நிலையில் அஜித்தின் பெற்றோர் இந்த காதலுக்கு கொள்ளவில்லை.

அதன் பிறகு அஜித்தின் பெற்றோர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் தன் மகனிடம் இந்த காதல் வேண்டாம் என்று எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று கூற அந்த தயாரிப்பாளரும் அஜித்துக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஹீராவை அழைத்து அஜித்தின் வாழ்க்கையில் மீண்டும் வரவே கூடாது என்றும் மிரட்டியுள்ளார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் பிறகு ஹீரா அஜித்துடன் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.

தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டே இருந்தால் அஜித்தை பார்க்க வேண்டிய சூழல் வந்து கொண்டே இருக்கும் என்று நினைத்து சினிமாவை விட்டு அவர் மொத்தமாக விலகி விட்டார். அதன் பிறகு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண வாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. தற்போது ஹீரா அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சரத்குமார் விரும்பிய ஹீரா சரத்துக்கு கிடைக்கவில்லை, ஹீரா விரும்பிய அஜித் ஹீராவுக்கு கிடைக்கவில்லை என்று சபிதா ஜோசப் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
