தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இந்திய திரை உலகில் தற்போது இருக்கும் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகின்றார். ஆனால் விஜய் ஆரம்பத்தில் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவரை மெல்ல மெல்ல ஆக்சன் ஹீரோவாக கொண்டு வந்தது பகவதி திரைப்படம் தான். பெரும்பாலும் விஜய் திருமலை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ரமணா தான் ஆக்சன் ஹீரோவாக மாற்றினார் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே விஜய் ஆக்சன் பண்ண வைத்ததை இயக்குனர் வெங்கடேஷ் தான். குஷி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் என தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்த விஜய்யை கோட் சூட் போட வைத்து பஞ்சு வசனங்கள் பேச வைத்து அழகு பார்த்தவர் தான் இயக்குனர் வெங்கடேஷ்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பகவதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜய், ரீமாசென் மற்றும் வடிவேலு எனப்படுவது நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவா இசை அமைத்திருந்தார். நடிகர் ஜெய் இந்த படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். கடந்த 2002 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அஜித்தின் வில்லன் மற்றும் விஜயகாந்தின் ரமணா ஆகிய படங்களுடன் விஜயின் பகவதி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ஆக்சன் ஹீரோவாக விஜய் பலம் வந்தார்.
தற்போது விஜய் தனது சினிமா உலகில் இறுதி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இப்படியான நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுர் தங்கம் பகவதி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில், ரஜினியின் படையப்பா திரைப்படம் வெளியான நேரத்தில்தான் பகவதி படத்தின் சூட்டிங் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது படப்பிடிப்பு நடந்த பகுதியில் இருந்த ஒரு திரையரங்கிற்கு விஜய் படையப்பா படம் பார்க்க சென்று இருந்தார்.
விஜய் ரஜினியின் தீவிர ரசிகர். படம் பார்க்க சென்றபோது தியேட்டரில் இவருக்கும் அங்கு படம் பார்க்க வந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே விஜய் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வேக வேகமாக வந்தார். மாஸ்டர் தியேட்டர்ல ஒரு சம்பவம் நடந்துருச்சு வாங்க எல்லாரும் போலாம் என்று கூப்பிட்டாரு. நீங்க இருங்க என்று சொல்லிட்டு நாங்கள் போய் பார்த்தா அங்க யாருமே இல்ல விஜய் யாருன்னு தெரிஞ்சு ஓடி போயிட்டாங்க. அதன் பிறகு பகவதி படத்தில் ஒரு ஷாட் வைத்தேன்.
அப்போ வில்லன் நடிகரை பார்க்கப் போகும்போது அவருடைய கால் தடுமாறி ஒரு தொட்டி கீழே விழுந்து விடும். அந்த காட்சிக்கு பதிலாக காலால் எட்டி உதைத்து தொட்டியை பறக்க விட்டார். அதன் பிறகு சென்று என் தங்கச்சி வயித்துல இருக்கும் குழந்தைக்கு ஏதாவது நடந்தால் எவன் வந்தாலும் சரி நீ உட்பட எல்லோருடைய கருத்தையும் அறுப்பன் என்று வசனம் பேசி கத்தியை சுழட்டி மேல பறக்க விட்டு பிடிப்பாரு. அதன் பிறகு என்னை கூப்பிட்டு இதோட என்ன ஒழிச்சிறலான்னு பாக்குறீங்களா என்று கேட்டார். அந்த சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது என ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுர் தங்கம் பேசியுள்ளார்.