பாட்டு புடிக்கலைன்னா போயா.. கடுப்பில் ஆர்.கே செல்வமணியை திட்டிய இளையராஜா.. அவரே பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..

By Nanthini on சித்திரை 18, 2025

Spread the love

ஆர்கே செல்வமணி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். செங்கம்பட்டியில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆர்கே செல்வமணி. சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த ஆர் கே செல்வமணி பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஆரம்பத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார் ஆர்கே செல்வமணி. 1980 ஆம் ஆண்டு விஜய்காந்தை கதாநாயகனாக வைத்து புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இருந்தது. சில அரசியல் பெரியோர்களின் தூண்டுதலின் பெயரால் பல பெண்களை கடத்திக் கொன்ற ஆட்டோ ஷங்கரின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக புலன் விசாரணை திரைப்படத்தை இயக்கியிருப்பார். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்...மீண்டும் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி  | Cinema Directors union election...R.K.Selvamani to be President again -  Tamil Filmibeat

   

 

   

அடுத்ததாக 1991 ஆம் ஆண்டு மறுபடியும் விஜயகாந்த் அவர்களை வைத்து கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ஆனது தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது. இந்த கதைக்களம் கொள்ளைக்காரன் வீரப்பனை அடிப்படையாகவும் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அந்தப் படத்திற்கு பிறகு தான் விஜயகாந்த் அவர்களை கேப்டன் விஜயகாந்த் என்று மக்கள் அழைக்க தொடங்கினர். தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி, பொன்விலங்கு, கண்மணி, ராஜ முத்திரை போன்ற பல படங்களை எழுதி இயக்கியுள்ளார் ஆர் கே செல்வமணி.

 

அந்தக் கண்ணும் சிரிப்பும்.. ஆர். கே. செல்வமணி- ரோஜா ஜோடி காதலில் விழுந்த  கதை தெரியுமா?

அடுத்ததாக 1994 ஆம் ஆண்டு அதிரடிப்படை என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலானவைகளில் ரோஜா நடித்திருப்பார். 2022 ஆம் ஆண்டு ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர் கே செல்வமணி. இப்படியான நிலையில் ஆர்கே செல்வமணி சமீபத்தில் அழுத்த பேட்டி ஒன்று இளையராஜா பற்றி பேசியுள்ளார். அதில், என்னோட படத்துக்கு எதுக்கு இளையராஜா பாட்டு எழுதினாலும் நான் பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன். ஆட்டமா தேரோட்டமா பாட்டு கூட முதலில் எனக்கு பிடிக்கவே இல்லை.

Ilaiyaraaja Song Secret | எந்த ட்யூன் போட்டாலும் நோ சொன்ன இயக்குனர்!  இளையராஜா செய்த சம்பவம்! எவர்க்ரீன் ஹிட்டான பாடல்! - Vijayakanth Rk  Selvamani Captain Prabhakaran movie ...

ஒரு கட்டத்தில் இளையராஜா பாட்டு புடிக்கலனா போயா போயா, எது சொன்னாலும் புடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்க உன் படத்துக்கு எல்லாம் நான் பாட்டு எழுத மாட்டேன் என்று சொல்லி கோபப்பட்டார். அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு இந்த பாட்டு புடிக்கல சோலையம்மா என்று நான் ஒரு படம் எடுக்கிறேன் அதற்கு நீங்கள் தான் பாட்டு எழுதணும் என்று சொன்னேன். அன்னைக்கு நைட் நான் சொன்னதும் மறுநாளே இளையராஜா பாட்டு எழுதி டியூன் போட்டு அன்னைக்கு சாயங்காலமே ட்ரெயினில் டிராக் அனுப்பி வைத்துவிட்டார். அத வச்சு பிஜிஎம் ரெடி பண்ணிட்டோம். அதன் பிறகு மறுநாள் காலை பிளைட்டில் பாட்டும் வந்திருச்சு. அந்த அளவிற்கு இளையராஜா கிட்ட நான் உரிமையோடு நடந்து கொள்வேன் என்று ஆர் கே செல்வமணி பேசியுள்ளார்