கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவான சச்சின் திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய சூப்பர் ஹிட் கொடுத்தது. விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜெனிலியா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் ரி ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் சச்சின் படத்தையும் திட்டமிட்டு இருந்தனர். அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 4k வடிவில் திரையரங்குகளில் சச்சின் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆவதற்கு முன்பே இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் 1.5 கோடியை எட்டி இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனநாயகன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று விஜய் தெரிவித்துள்ளார். அரசியலில் மும்முறமாக ஈடுபட்டிருக்கும் விஜய் ஜனநாயகம் படத்தை பெரிதும் நம்பி உள்ளார். இப்படியான நிலையில் விஜய்யின் அரசியல் என்று யார் அவரது ரசிகர்கள் சோகமடைந்திருக்கும் சமயத்தில் தற்போது புனித வெள்ளியான இந்த நாளில் சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை சத்தியம் திரையரங்கில் சச்சின் திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த படத்தைப் பார்த்த திரை பிரபலங்களும் பத்திரிகையாளர்களும் மீண்டும் விஜயை கல்லூரி பையனாக பார்ப்பது போன்று இருப்பதாக பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் விஜய் மனதார பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய மிஷ்கின், 27 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். என் மனதிற்கு நெருக்கமான நடிகராக விஜய் இருக்கின்றார். எனது சினிமா தெரியவரும் அவர் நடித்த யூத் திரைப்படத்தில் தான் தொடங்கியது. அதேபோல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு சார் ரொம்ப அருமையான மனிதர். என்னை அவர் மகன் போல தான் பார்ப்பார்.

அவர் என்னை இந்த படம் பார்க்க அழைத்தார். மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டேன். நாம் லவ் பண்ணும் போது எப்படி குழந்தைத்தனமாக இருப்போமோ அதேபோன்ற குழந்தைத்தனத்துடன் சச்சின் படம் இருந்தது. முதல்முறையாக தற்போது தான் சச்சின் படத்தை பார்த்தேன். விஜயின் லுக் ரொம்பவே நல்லா இருந்தது. கல்லூரி காலத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு. ரொம்ப என்ஜாய் பண்ணி படம் பார்த்தேன். அவர் இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என மிஸ்கின் தெரிவித்துள்ளார்.
