சினிமாவுல இப்படியும் ஒருதரா?.. பாடல் பதிவை தொடங்கும் முன்பு பிரபல பாடகர் கிஷோர் குமார் செய்யும் செயல்..!

By Nanthini on சித்திரை 18, 2025

Spread the love

பாலிவுட் திரையுலகம் கண்டெடுத்த பன்முகத் திரைக்கலைஞன். ஹிந்தி திரையிசை உலகின் முடிசூடா மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடி, “கிஷோர்தா” என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படும் பின்னணிப் பாடகர்  தான் குஷார் குமார். நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், மற்றும் திரைக்கதை படைப்பாளி எனப் பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார். 1930 – 1950 களின் காலகட்டத்தில் இந்தித் திரையுலகின் 30 ஆண்டுகால தனது நெடும்பயணத்தில் பல அவதாரத்தில் பவனிவந்த கிசோர் குமார் இசைத்துறையின் மூலம்தான் நாடறிந்த நட்சத்திரமாகப் பிரபலமடைந்தார். ஹிந்தி பிரபல பாடகரான இவர்  தனக்கு பணம் வரவில்லை என்றால் பாடவே செல்ல மாட்டார். ஒவ்வொரு முறையும் தனக்கு வரவேண்டிய முழு படம் வந்து விட்டதா என்பதை ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்று தன்னுடைய அசிஸ்டன்ட்டை வைத்து தான் அறிந்து கொள்வார்.

   

அவர் மூலமாகத்தான் தயாரிப்பாளர்களிடமிருந்து கிஷோர் குமார் பணத்தை வாங்குவார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நின்று கொண்டு தன்னுடைய அசிஸ்டன்ட்டை பார்க்கும் போது அவர் தனது கையை உயர்த்தினால் பணம் வந்து விட்டது என்று அர்த்தம். அப்படி அவர் தன்னுடைய கையை உயர்த்தவில்லை என்றால் பணம் இன்னும் வந்து சேரவில்லை என்று புரிந்து கொள்ளும் கிஷோர் குமார் தனக்கு தொண்டை சரி இல்லை இன்று என்னால் பாட முடியாது என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவாராம். அப்படி ஒரு நாள் பாடல் பதிவிற்காக ஒளிப்பதிவு கூடத்திற்கு கிஷோர் குமார் சென்று உள்ளார்.

   

Pin by Vinod Sonawane on legend kishorda | Kishore kumar, Film history,  Vintage bollywood

 

அங்கு உள்ளே நின்று கொண்டு தன்னுடைய அசிஸ்டண்டை பார்க்கும் போது அவர் கையை உயர்த்தவே இல்லை. என்ன இவர் கையை உயர்த்தவே இல்லை என்ற யோசித்துக் கொண்டிருந்த கிஷோர் குமார் இரண்டு மூன்று முறை சத்தமாக இரும்பி விட்டு இன்று தொண்டை கரகரப்பாக இருக்கிறது பாடல் பதிவை நாளை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளார். அதன் பிறகு ஒரு காரணத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்ததும் அவருடைய அசிஸ்டன்ட் எதற்காக வெளியே வந்தீங்க என்று கேட்டதும் கிஷோர் குமார் நீதான் கையை உயர்த்தவே இல்லையே பணம் வரவில்லை அதனால் தான் பாடல் பதிவை செய்யாமல் வெளியே வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களின் மனதில் என்றும் வாழும் கிஷோர் குமார்... டூடிளில் படம் வெளியிட்டு  பெருமை செய்த கூகுள்! | Google doodle salutes Kishore Kumar on his 85th  birthday - Tamil Filmibeat

உடனே அவர் என்னங்க இப்படி பண்றீங்க இன்னைக்கு நம்மளோட சொந்த படம் இதுக்கு போய் காசு கேட்கிறீர்களே என்று கேட்டுள்ளார். அப்படி உங்களுக்கு பணம் தேவை என்றால் நம்ம பணத்தையே எடுத்து நம்ம பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறியுள்ளார். கிஷோர் குமாரை பொறுத்தவரை ஒருமுறை ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து வெளியே வந்து விட்டால் திரும்பவும் சென்ற பாட மாட்டார். அதனால் நம்முடைய படமாக இருந்தாலும் சரி நாளை ரெக்கார்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அன்று கிளம்பி விட்டாராம். இப்படியும் சினிமாவில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.