தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக கொண்டாடப்படுபவர் தான் ஏ ஆர் ரகுமான். ரோஜா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் அதுவரை இளையராஜா கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமாவை மெல்ல மெல்ல ஏ ஆர் ரகுமான் எனும் இசை புயல் ஆக்கிரமித்தது. இவரை இசை அமைத்த முதல் படமே பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் படத்தின் பாடல் காலம் கடந்தும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஏ ஆர் ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்தினத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறிய ரகுமான் அவர் இயக்கிய திரைப்படங்களுக்கு வரிசையாக இசையமைத்தார்.
தற்போதும் அவர் இயக்கியுள்ள தக் லைப் திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்திருக்கிறார். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ரகுமான் இன்றளவும் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்கவில்லை. சினிமாவில் இப்படி கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரகுமான் சாய்ராம் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் ஏ ஆர் ரகுமான் மூத்த மகள் கதீஜா தன் தந்தையைப் போலவே இசையமைப்பாளராக பணியாற்றி வருகின்றார்.
அதனைப் போலவே மகன் அமீனும் பாடகராக கலக்கி வருகின்றார். சும்மா 29 ஆண்டுகள் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த ஏ ஆர் ரகுமான் கடந்த ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இப்படியான நிலையில் இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடும் ஏ ஆர் ரகுமான் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவருடைய சொத்து மதிப்பு சுமார் 2100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சொத்து மதிப்பு உள்ள இசையமைப்பாளரும் இவர்தான். இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் சொகுசு பங்களா உள்ளது. அது தவிர துபாய் மற்றும் சென்னையில் அதிநவீன இசைக்கூடங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். மேலும் விளைவு உயர்ந்த பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.