விஜய் டிவியில் மக்களுக்கு விருப்பமான சீரியல்களில் ஒன்றுதான் செல்லம்மா. இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது. இதில் நாயகன் சித்து கேரக்டரில் அர்ணவ் நடித்து வந்த நிலையில் நாயகி செல்லமா கேரக்டரில் அன்ஷிதா நடித்து வந்தார். சீரியலில் செல்ல மாவை ஒரு தலையாக சித்து காதலிக்க, ஒரு கட்டத்தில் செல்லம்மா தன்னுடைய சொந்த தாய்மாமன் மகள் என்று தெரிய வர இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. செல்லமாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற செல்லம்மா சித்துவை காதலித்து திருமணம் செய்து கொள்வது தான் கதை.
இந்த சீரியலில் பில்லி கதாபாத்திரத்தில் மேகா என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சுரேந்தர். சீரியலில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் இரண்டு வருடங்கள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் நாயகன் நாயகியாக நடித்து வந்த அன்ஷிதா மற்றும் அர்ணவ் ஆகிய இருவரும் சமீபத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டனர். இப்படியான நிலையில் செல்லமா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்ரேயா சுரேந்தருக்கு அண்மையில் படு கோலாக்காலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.